'மகாமுனி' திரைப்படத்திற்காக ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது

'மகாமுனி' திரைப்படத்திற்காக ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது
'மகாமுனி' திரைப்படத்திற்காக ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது
அயோத்யா திரைப்பட விழாவில் 'மகாமுனி' திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மகாமுனி'. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. 'மகாமுனி' படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 போட்டிகளில் இறுதிவரை சென்றுள்ளது. 1 விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்பட விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, 15-வது அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது ஆர்யாவிற்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து நடிகர் ஆர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்யா திரைப்பட விழாவின் 15வது ஆண்டு விழாவில் மகாமுனி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள்' எனப் பதிவிட்டுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com