\
ஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்

ஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்

ஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர்
Published on

க்ரைம் திரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகுவதாக அப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். 

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இப்படத்தை ஆர்யா நடிப்பில் ‘மௌனகுரு’ இயக்குநர் சாந்தகுமார் இயக்க உள்ளார். 

மேலும் இப்படத்தில் நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி.எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்து எஸ்.எஸ் தமன் இசையமைக்கிறார். 

இப்படத்தின் தொடக்கவிழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், நடிகர் ஆர்யா, நடிகை இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், தொகுப்பாளர் வி.ஜே சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் ,இயக்குநர்கள் எம்.ராஜேஷ், சந்தோஷ் பி ஜெயக்குமார், ஹரிகுமார், தயாரிப்பாளர்கள் 2டி என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மதன்(எஸ்கேப் ஆர்டிஸ்ட்), சக்திவேலன்(சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் சாந்தகுமார் கூறுகையில், க்ரைம் திரில்லர் ஜானரில் ‘மகாமுனி ’ தயாராகுவதாகவும் படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில்  படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com