\
‘டெடி’  இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனுடன் மீண்டும் இணையும் ஆர்யா!

‘டெடி’ இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனுடன் மீண்டும் இணையும் ஆர்யா!

‘டெடி’ இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனுடன் மீண்டும் இணையும் ஆர்யா!
Published on

டெடி திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா - சக்தி சௌந்தர்ராஜன் இணையும் புதிய படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

’நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுடன் ‘டெடி’ படத்திற்குப் பிறகு நடிகர் ஆர்யா மீண்டும் இணைந்திருக்கிறார். ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.  குறிப்பாக சிறுவர்களை இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்தது. 

இதையடுத்து ஆர்யா -  சக்தி சௌந்தர் ராஜன் ஆகியோர் மீண்டும் புதிய படத்திற்காக இணைகின்றனர்.  இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.  அதேபோல் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அதை முடித்துக்கொண்டு விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் இந்தப் படத்தை ஆர்யா தயாரித்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா நடிப்பில், ‘அரண்மனை 3’, ‘எனிமி’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com