\
எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஆர்யாவின் ‘டெடி’ பட ட்ரைலர் வெளியீடு!

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஆர்யாவின் ‘டெடி’ பட ட்ரைலர் வெளியீடு!

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஆர்யாவின் ‘டெடி’ பட ட்ரைலர் வெளியீடு!
Published on

ஆர்யா நடித்துள்ள ’டெடி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன்,டிக் டிக் டிக் படங்களை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் அவர் பாணியிலேயே அடுத்ததாக ‘டெடி’ படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்யா, சாயிஷா நடித்துள்ள 'டெடி' இப்படம் நேரடியாக  ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. முதலில் மாலை 4.30 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், தாமதமாக தற்போதுதான் வெளியிட்டிருக்கிறார்கள். இது த்ரில்லர் படமா? அல்லது பேய் படமா? என்று நம்மை சிந்திக்கவைத்து திகிலூட்டி எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது ட்ரைலர். ஆனால், மருத்துவத்துறைச் சார்ந்த த்ரில்லர் படம் என்பது மட்டும் ட்ரைலர் உறுதிப்படுத்துகிறது. பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

மேலும், இப்படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/JjMM0W4NDAk" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com