அல்லு அர்ஜுன் நடிக்கும் ’புஷ்பா’ படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் தெலுங்கின் முன்னணி இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தின் அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று வெளியானது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தப்பட்ட இக்கதையில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.
பிரகாஷ் ராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியிடம் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தேதிகள் சரியாக இல்லாததால் விஜய் சேதுபதி பின்வாங்கினார்.
இந்நிலையில், தற்போது ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, ஆர்யா கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த ‘வருடு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில், சுகாசினி மணிரத்னமும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் ‘எனிமி’ படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.