சினிமா
இறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’
இறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’
நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நாசர், சூரி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
முன்னதாக, ஜெயம் ரவியுடன், அரவிந்த்சாமி இணைந்து நடித்த தனி ஒருவன் மற்றும் போகன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அரவிந்த்சாமி நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.