தனது ட்விட்டர் பக்கத்தில் மகனை வாழ்த்தி ஒரு ட்விட் போட்டுள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
தமிழ் சினிமாவின் ஆணழகன் என புகழப்படுபவர் நடிகர் அரவிந்தசாமி. இன்று வரை அவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். அவரை பல நடிகைகள் தனக்குப் பிடித்த நடிகராக குறிப்பிட்டு வருகின்றனர். தனது மகன் புகைப்படம் ஒன்றை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது மகன் இன்று பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார். அந்த மகிழ்ச்சியை அவர் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறானா? என்று பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அவர் பதிவிட்டுள்ள பதிவில், “என் மகன் ஐபி புரோகிராம் பட்டதாரியாகி உள்ளான். அவனை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அவன் இந்த மைல்கல்லை அடைவதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உனது வாழ்க்கையில் நேர்மையும் மகிழ்ச்சியில் அன்பும் அமைதியும் நிலைக்கட்டும். உலகிலுள்ள அனைவருக்கும் பயன்தரக் கூடியதாக உன் பணி இருக்கட்டும். மிகப் பெரிய கனவு என்பது சாத்தியமானது. அது எனக்கு தெரியும்” என்று மகனை அவர் பாராட்டி இருக்கிறார்.