‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவின் அடுத்த திரைப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கடைசியில் வெளியான திரைப்படம் ‘அருவி’. மிகக் குறைவான செலவில் தயாரான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை சம்பாதித்தது. இப்படத்தின் நாயகி அதிதி பாலன் ஒரே இரவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். இவரது அடுத்த படைப்பு குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆகவே அவரது படைப்புக் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இன்று அவரது அடுத்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தை ஆர்.டி. ராஜா அவரது கம்பெனி 24 ஏஎம் ஸ்டுடியோ மூலம் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அழகான குமுளி லோயர் கேம்ப் மலைப்பகுதியில் நடைபெற்ற பூஜைக்கான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.