ஹாலிவுட் இயக்குநர் கிஸ்டோபர் நோலனை தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து ஒரு பதிவை இட்டுள்ளார் பாடகர் அருண்ராஜா காமராஜ்.
ரஜினியின் ‘கபாலி’ படத்தில் வெளியான ‘நெருப்புடா’ பாடல் மூலம் ஓவர் நைட்டில் புகழ் வெளிச்சத்திற்கு போனவர் அருண்ராஜா காமராஜ். அந்தப் பாடல் வெளியான பிறகு தனி நட்சத்திரமாக அவர் தனித்து தெரிந்தார். இந்நிலையில் இன்று கமல்ஹாசன் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை அப்படியே உல்டாவாக ‘போடோஷாப்’ செய்து அவருடன் தான் இருப்பதைப் போல மாற்றி வெளியிட்ட காமராஜ், “உங்களால் என் அடுத்த படத்தின் டைட்டில் பாடலை பாடித்தர முடியுமா?”என கிறிஸ்டோர் கேட்டதாகவும் அதற்கு இவர் “தமிழ்லதான் பாடுவேன் பரவாயில்லையா?” என சொல்வதைபோலவும் கலாய்த்திருக்கிறார். இவர் கிறிஸ்டோபரை கலாக்கிறாரா? இல்லை, கமல் சந்திப்பைக் கலாய்க்கிறாரா? என பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.