பாடலாசிரியரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் ' கபாலி'யில் எழுதி பாடிய 'நெருப்புடா.. நெருங்குடா', 'பைரவா'வின் 'வர்லாம் வர்லாம் வா' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
இதுகுறித்து அவர் பேசிய போது " "என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா" என்கிற தலைப்பில் தான் முதலில் திரைக்கதை எழுதினேன். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை. அதற்கு பின்னால் நான் யோசித்து பார்க்கும் போது, பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக எந்தவித படமும் வராமல் இருப்பது என் சிந்தனையில் உதித்தது. அதனால் பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக படம் எடுக்க முடிவு செய்தேன். கதையை, என் நண்பர்களிடம் விவரிக்கும் போது சிறப்பாக இருப்பதாக பாராட்டினார்கள். தற்போது நானும், என் நண்பர்களும் பணம் செலவழித்து படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளோம். புதிய முகத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். விளையாட்டு, மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ளவர்கள் எங்களை அணுகலாம்" என கூறியுள்ளார்.
இயக்குனராக அறிமுகமாக உள்ள அருண்ராஜா காமராஜ்க்கு நடிகர் சிவகார்த்தியேகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.