அருண் விஜயின் ‘யானை’ ரிலீஸ் தேதி மாற்றம் - ‘வீட்ல விசேஷம்’ உடன் மோதலை தவிர்க்கவா?

அருண் விஜயின் ‘யானை’ ரிலீஸ் தேதி மாற்றம் - ‘வீட்ல விசேஷம்’ உடன் மோதலை தவிர்க்கவா?

அருண் விஜயின் ‘யானை’ ரிலீஸ் தேதி மாற்றம் - ‘வீட்ல விசேஷம்’ உடன் மோதலை தவிர்க்கவா?

கிராமத்து பின்னணியில் அருண் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதல்முறையாக அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘யானை’. குடும்ப உறவுகள் என்றாலும், இதுவரை இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்காத நிலையில், இந்தப் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

மேலும் பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வழக்கமான குடும்பம் மற்றும் ஆக்ஷன் கதையாக அவரது பாணியில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘யானை’ படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ5 ஓடிடி தளம் ஏற்கனவே கைப்பற்றியிருக்கிறது. வரும் ஜூன் 17-ம் தேதி ‘யானை’ வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பட வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1-ம் தேதி ‘யானை’ படம் வெளியாக உள்ளது. தற்போது கமலின் ‘விக்ரம்’ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருப்பதாலும், ஜுன் 17-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜின் ‘வீட்ல விசேஷம்’ படம் வெளியாவதாலும், குறைந்த அளவே திரையரங்கு கிடைக்கும் என்பதால் படத்தை ஒத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், படக்குழு உறுதி செய்தப் பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பிற்கான முழு காரணம் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com