\
நடிகர் விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகள் நட்ட அருண் விஜய், ஆத்மிகா!

நடிகர் விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகள் நட்ட அருண் விஜய், ஆத்மிகா!

நடிகர் விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகள் நட்ட அருண் விஜய், ஆத்மிகா!
Published on: 

மறைந்த நடிகர் விவேக் கனவை நிறைவேற்றும் விதமாக நடிகர் அருண் விஜய்யும், நடிகை ஆத்மிகாவும் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகர் விவேக் மாரடைப்பால் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவிற்கு திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் சிந்தியது. காரணம், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சமூக சிந்தனையோடு செயல்பட்டு தமிழகம் முழுக்க 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றிக் கொண்டு வந்தார் நடிகர் விவேக்.

அவர், நினைவை போற்றும் விதமாக தமிழகம் முழுக்க இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ஆத்மிகா தனது வீட்டில் இன்று மரக்கன்றுகளை நட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்” என புகைப்படங்களோடு பதிவிட்டுள்ளார்.

அதேபோல, நடிகர் அருண் விஜய்யும் விவேக்கின் நினைவை போற்றும் விதமாக தனது அப்பா விஜயகுமார், மற்றும் மகனுடன் மரக்கன்றுகள் நட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com