\
தனுஷ் படத்துடன் மோதும் அருள்நிதியின் ‘D ப்ளாக்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் படத்துடன் மோதும் அருள்நிதியின் ‘D ப்ளாக்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் படத்துடன் மோதும் அருள்நிதியின் ‘D ப்ளாக்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on: 

அருள்நிதியின் ‘D ப்ளாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

கடந்த ஆண்டு வெளியான ‘களத்தில் சந்திப்போம்’ வெற்றிக்குப்பிறகு அருள்நிதி ‘தேஜாவு’, ‘டைரி’, ‘D ப்ளாக்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘D ப்ளாக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

அருள்நிதி நடிப்பில்  15-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தினை 'எரும சாணி' யூடியூப் குழுவின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரான் ரத்தன் யோகான் இசையமைக்க, தயாரிப்பையும் ஒளிப்பதிவையும் அரவிந்த் சிங் செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கவனம் ஈர்த்திருந்த நிலையில் , ‘D ப்ளாக்’ வரும் ஜூலை 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதே தேதியில், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘திருச்சிற்றம்பலம்’ படமும் வெளியாகிறது. இதனை ஏற்கனவே, நடிகர் உதயநிதி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் ‘விருமன்’ படத்தை கைப்பற்றிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரியே ‘டி ப்ளாக்’ படத்தினையும் வெளியிடுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com