\
'விஜய்-61' படத்தில் ஏ.அர்.ரஹ்மான்?

'விஜய்-61' படத்தில் ஏ.அர்.ரஹ்மான்?

'விஜய்-61' படத்தில் ஏ.அர்.ரஹ்மான்?
Published on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய்-61’ படத்திற்கு இசையமைக்க ஏ.அர்.ரஹ்மான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தெறி’ வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் இயக்குனர் அட்லி. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் படத்திற்கான தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளிவந்த வன்னம் உள்ளது. இந்நிலையில் படத்திற்கு இசையமைக்க ஏ.அர்.ரஹ்மான் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனினும் அதிகாரபூர்வ தகவல்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிபார்க்கப்படுகிறது.
விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளிவந்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இக்கூட்டணி இணையவிருக்கும் செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மாபெரும் வெற்றிக் கூட்டணி என்பதால் சங்கரின் அசிஸ்டன்ட் அட்லியுடன் ரஹ்மான் இணையவிருக்கும் செய்தி அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பைரவா’ படத்தின் ரிலிஷுக்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு விஜய்யின் 61வது படம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவருவதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com