தமிழ் மொழிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தக் லைஃப் சம்பவங்கள்!

தமிழ் மொழிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தக் லைஃப் சம்பவங்கள்!
தமிழ் மொழிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தக் லைஃப் சம்பவங்கள்!

இசைப்புயல், ஆஸ்கர் நாயகன், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ் என எக்கச்சக்கமான அடைமொழிகளை கொண்டு அழைக்கப்படும் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 57வது பிறந்த நாள்.

இந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களை பகிர்ந்து தங்களது வாழ்த்துகளை பதிவுகளாக தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மிகவும் சாந்த சொரூபமான ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரையில் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது செய்த மரண மாஸ் மொமன்ட்கள் குறித்து பார்க்கலாம்.

அது உலக அரங்கில் தமிழ் மொழியில் பேசியதாகட்டும், தன்னையும் தனது படைப்பையும் நக்கல் அடித்தவர்களுக்கு தக்க பதிலடியை கொடுத்ததாகட்டும், சமயங்களில் thug life பேட்டி கொடுத்தது என ஏராளமான சம்பவங்களை செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

அவற்றில் சில:

1) ஏ.ஆர்.ரஹ்மான் ரானக் என்ற மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடப்பட்ட போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சல்மான் கானும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது, ஏ.ஆர்.ரஹ்மானை சாதாரணமான இசையமைப்பாளர்தான் எனக் கூறி அவருக்கு சல்மான் கான் கை கொடுக்க போவார்.

ஆனால் பாக்கெட் இருந்து கையை எடுத்தாலும் மீண்டும் உள்ளே வைத்து கை கொடுக்காமல் இருப்பார் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு எதிர்வினையாக அதே ஆல்பம் நிகழ்ச்சியின் பிரஸ் மீட்டிங்கின் போது “எப்போது சல்மான் கான் படத்துக்கு மியூசிக் போடப் போறீங்கனு” கேட்ட கேள்விக்கு “எனக்கு பிடிக்குறா மாதிரி எப்போ அவர் படம் நடிக்கிறாரோ அப்போ நடக்கும்” ஒரே போடாக போட்டு முடித்திருப்பார் ரஹ்மான்.

2) 2012ம் ஆண்டு IIFA (International Indian Film Academy Awards) விருது விழா சிங்கப்பூரில் நடந்தது. மற்ற மாநில நட்சத்திரங்களும் பங்கேற்ற அந்த விருது விழா முழுக்க முழுக்க இந்தியிலேயே நடத்தப்பட்டது. “நாங்களும் வந்துருக்கோம். எங்கள பாத்தா எப்படி இருக்கு” என சொல்லாமல் சொல்வது போல ஏ.ஆர்.ரஹ்மான் செமத்தியான ஒரு சம்பவத்தை விழா மேடையிலேயே செய்திருப்பார்.

அதில், சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மானும், நடிகை ரேகாவும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது விருதை அறிவிக்கும் போது, “The IIFA சிறந்த நடிகருக்கான விருது ரன்பீர் கபூர் அவர்களுக்கு” என தமிழில் பேசி அரங்கையே அதிர வைத்திருந்தார் ரஹ்மான். இந்த கவுன்ட்டர் மற்ற பாலிவுட் நட்சத்திரங்களுக்கு சற்று அதிர்ச்சியையே கொடுத்திருந்தது.

“எல்லா புகழும் இறைவனுக்கே” என ஆஸ்கர் விருது விழாவிலேயே தமிழில் பேசிய ரஹ்மான் முன், தமிழ் மொழியை புறக்கணிக்கும் விதமாக பேசியவர்களுக்கு தன்னுடைய அமைதியான உடல்மொழியிலேயே கச்சிதமாக தக்க பதிலடியை கொடுத்திருப்பார்.

மொழிப்பற்றுக்கு அடுத்தபடியாக தன்னுடைய துறை சார்ந்த கேள்விகளுக்கு அதே பாணியிலான கவுன்ட்ரை கொடுத்து கிளாப்ஸ்களை பறக்கவிட என்றுமே ஏ.ஆர்.ரஹ்மான் தவறியதில்லை. அதன்படி பத்திரிகையாளர் சந்திப்பின் போது “முந்தைய காலத்தில் பாடல்களை கேட்கும்போது இசை குறைவாக இருந்ததால் வரிகள் தெளிவாக புரிந்தது. ஆனால் இப்போ வர பாடல்களை கேட்டால் வரிகளே புரிவதில்லை. இசை மட்டும்தான் கேட்கிறது” என்ற கேள்விக்கு, “நல்ல ஹெட்ஃபோன், நல்ல சிஸ்டம் வாங்கி பாட்டு கேட்டா நல்லா கேட்கும்” என்று ரஹ்மான் கூறியிருப்பார்.

அதேபோல, “எந்த விழாவுக்கு சென்றாலும் தமிழிலேயே பேசுறீங்களே, அது தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்காகவா?” என்று நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு “கண்டிப்பா. நான் லண்டன் போலாம், அமெரிக்கால இருக்கலாம். ஆனால் எங்க அம்மாவ நான் mother என கூப்பிடுவதில்லை. அம்மா என்றுதான் கூப்பிடுகிறேன். அது மாதிரிதான்” என BGM போட்டு கொண்டாடும் அளவுக்கு பதிலளித்திருப்பார் ரஹ்மான்.

அடுத்ததா, கடந்த 2017ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக கனடாவில் ஒரு இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதற்கு ரஹ்மானும் சென்றிருந்தார். அங்கு பேசிய ஒரு கனடா மேயர், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனடா குடியுரிமை வழங்குவதாக அறிவித்தார். இதை ஏற்க மறுத்த ரஹ்மான், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவும் இட்டிருந்தார்.

அதில், “இசை நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கும், குடியுரிமை வழங்குவதற்காக அழைத்தற்கும் நன்றி. ஆனால் இந்தியாவின் தமிழ்நாட்டில் குடும்பம் மற்றும் நண்பர்களோடு ரொம்பவே நிம்மதியாக இருக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து கனடாவில் உள்ள ontario என்ற ஊரில் உள்ள தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.

இப்படியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாய் தமிழ் நாட்டையும் செம்மொழியான தமிழ் மொழியையும் உலக அரங்குக்கு தெரிவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கே உரிய பாணியில் சிறப்பான சம்பவமாக செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்பதே சரி என ஆளுநர் ரவி கூறியிருந்தது பெரும் விவாத பொருளாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரத்துக்கும் அரசியல் ரீதியாக இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படியும் பதிலளிப்பார் என அவரது ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com