\
முன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்

முன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்

முன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்
Published on

பிரபல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படங்களாக எடுக்கும் கலாச்சாரம், பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது.

தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக

உருவாக்கப்பட்டுள்ளன. அதே போல், தோனியின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகி வணிக ரீதியாகவும் அசத்தியது.

’சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் சச்சின் நடித்த அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ரிலீசுக்கு

தயாராகி வருகிறது.

அதே வகையில் அரசியல்வாதியான கர்நாடக முன்னால் முதலமைச்சர் குமாரசாமியின் வாழ்க்கை வரலாறை படமாக்க கிளம்பி

இருக்கிறார்கள். குமாரசாமி கேரக்டரில் நடிக்க இருப்பது ஆக்சன் கிங் அர்ஜூன். ’பூமி புத்ரா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள

இந்தப்படத்தை நாராயன் என்பவர் இயக்குகிறார். பல படங்களை தயரித்து இருப்பதால் குமாரசாமியின் சொந்த நிறுவனமே

இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப்படம் கர்நாடக அரசியல் களத்தில் நடந்த சில

உண்மைச் சம்பவங்களையும் பேச இருக்கிறதாம். அடுத்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் மாநிலத்தேர்தலில் பூமிபுத்ரா

அதிர்வுகளை ஏற்படுத்துமாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com