அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்துக்கு ’வால்டர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதை யு.அன்பரசன் இயக்குகிறார்.
மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தயாரிக்கிறார். இவர் தற்போது சத்யசிவா இயக்கத்தில் ’கழுகு 2’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து, வால்டர் படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தில், அர்ஜுன், விக்ரம் பிரபு, ஜாக்கி ஷெராப் ஆகிய மூன்று பேரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவு செய்யப் படவில்லை.
Read Also -> அறிமுக இயக்குனருடன் இணைகிறார் விஜய் சேதுபதி
ஒளிப்பதிவு, சதீஷ்குமார். ’அர்ஜூன் ரெட்டி’ ரதன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் யு.அன்பரசன். ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.