கல்யாண வாழ்க்கை அவ்ளோதான், ஆனால் வாழ்கிறது காதல்: இந்தி ஹீரோ திடீர் முடிவு
பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலும் அவர் மனைவியும் பிரிவதாக அறிவித்துள்ளனர். இது இந்தித் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.
பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடல் மெஹர் ஜெசியாவை 1998-ல் திருமணம் செய் தார். இவர்களுக்கு மஹிகா (16), மைரா (13) ஆகிய மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களது 20 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அர்ஜூனும் அவர் மனைவி மெஹரும் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் கருத்துவேறுபாடு நிலவுவதாகவும் விரைவில் விவாக ரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை இந்த அறிவிப்பை இருவரும் வெளியிட் டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க இருக்கிறோம். இந்தப் பிரிவு எங்கள் மகள்களின் சம்மதத்துடனேயே நடக்கிறது. அவர்களின் முன்னேற்றம் எங்களுக்கு முக்கியம். எங்கள் திருமண வாழ்க்கை முடிந்து விட்டாலும் காதல் வாழ்ந்துகொண்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.