பிசினஸ் பார்ட்னர்களாக மாறும் விராட்-அனுஷ்கா ஜோடி?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது காதலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து ரெஸ்டாரண்ட் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் விராட்-அனுஷ்கா காதல் ஜோடி மிகவும் பிரபலமானது. கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாக செல்வது வழக்கம். கடந்த 2013-ல் ஷாம்பு விளம்பரத்தில் கோலி, அனுஷ்கா சேர்ந்து நடித்தனர். இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்களின்போது விராட் கோலியுடன் அனுஷ்காவும் அவ்வப்போது செல்வார்.
இந்த நிலையில் இருவரும் இணைந்து புதிதாக ரெஸ்டாரண்ட் ஒன்றினை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக மும்பை மற்றும் டெல்லியில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை காதல் ஜோடிகளாக வலம் வந்த விராட்-அனுஷ்கா ஜோடி இனி பிசினஸ் பார்ட்னர்களாகவும் மாறுவார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் விளம்பர படம் ஒன்றில் சேர்ந்து நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.