\
Keneeshaa & Ravi Mohan
Keneeshaa & Ravi Mohan this photo shared on instagram

’Ordinary Man படத்தில்..’ ரவி மோகன்–கெனிஷா குறித்து வெளியான அப்டேட்.!

யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘ஆர்டினரி மேன்’ படத்தில், பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகும் வாய்ப்பு குறித்து புதிய தகவல்கள் பரவி வருகின்றன..
Published on
Summary

நடிகர் ரவி மோகன் இயக்கும் ‘Ordinary Man’ படத்தில் ஒரு அங்கமாக கெனிஷா இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகராக அறியப்பட்ட ரவி மோகன், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். தனது நீண்ட நாள் கனவான தயாரிப்பு நிறுவனத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ள அவர், அதன் முதல் படைப்பாக ‘Ordinary Man’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

An Ordinary Man
An Ordinary Manpt

இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ஆர்டினரி மேன்’ படத்தின் இசையமைப்பாளர் தொடர்பாக புதிய தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு ஹைட்ரோ இசையமைப்பார் என தகவல் வெளியானது.

தற்போது பாடகி கெனிஷா பிரான்சிஸ், இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்திற்கான இசைப் பணிகளை அவர் தொடங்கிவிட்டதாகவும் பேசப்படுகிறது.

எனினும், கெனிஷா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை ரவி மோகன் அல்லது படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com