பரம சுந்தரியின் இதயத்தில் இருப்பது பாகுபலிதானா? போட்டுடைத்த வருண் தவான்.. வைரல் வீடியோ!

பரம சுந்தரியின் இதயத்தில் இருப்பது பாகுபலிதானா? போட்டுடைத்த வருண் தவான்.. வைரல் வீடியோ!
பரம சுந்தரியின் இதயத்தில் இருப்பது பாகுபலிதானா? போட்டுடைத்த வருண் தவான்.. வைரல் வீடியோ!

இந்திய சினிமாத் துறையின் most eligible bachelor என்ற பட்டத்துடன் வலம் வரும் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கக் கூடியவர் பிரபாஸ். தெலுங்கு திரைத்துறையின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராஜமவுளியின் பாகுபலி படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார் பிரபாஸ்.

தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆதி புருஷ் படத்துக்கான கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். மேலும் சைஃப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த ஆதி புருஷ் ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனங்களால் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதனிடையே கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

அதேவேளையில், ஆதி புருஷ் நாயகி க்ரித்தி சனோனும் தன்னுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, பாலிவுட்டில் வருண் ஜோடியாக க்ரித்தி நடித்திருக்கும் பேடியா (Bhediya) படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் வருண் தவானும், க்ரித்தி சனோனும் பங்கேறிருந்தார்கள். அப்போது, க்ரித்தியின் திருமணம் குறித்து வருண் தவான் கொடுத்த ஹின்ட்தான் டாக் ஆஃப் தி இன்டெர்நெட்டாக இருக்கிறது.

அப்போது வருணிடம் கரண் ஜோஹர் க்ரித்தியின் டேட்டிங் குறித்து கேட்க அதற்கு, “க்ரித்தி இன்னொருவரின் இதயத்தில் இருக்கிறார்” என வருண் இந்தியில் கூற, அவர் பேசுவதை நிறுத்தச் சொல்லி க்ரித்தி தடுத்த போது, அந்த நபர் யார் என கரண் கேட்கிறார்.

அதற்கு வருண், “அந்த நபர் மும்பையை சேர்ந்தவர் அல்ல. ஆனால் இப்போது தீபிகா படுகோனுடன் நடித்து வருகிறார்” என கூறியிருக்கிறார்.

அந்த நபர் பிரபாஸ்தான் என அரங்கில் இருந்த அனைவருகே யூகித்தபடி கைத்தட்டல்களை பறக்கச் செய்திருக்கிறார். ஏனெனில், தீபிகா படுகோனுடன் தற்போது நாக் அஷ்வினின் இயக்கத்திலான project k என்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் பிரபாஸ்தான் நடித்து வருகிறார்.

முன்னதாக, பேடியா படத்தின் வேறொரு புரோமொஷனின் போது, ”பிரபாஸை திருமணம் செய்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டேன்” என க்ரித்தி சனோன் கூறியிருந்ததும் சமூக வலைதளத்தில் வைரலானதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிரபாஸும், க்ரித்தி சனோனும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் எனவும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com