பாலத்தில் இருந்து விழுந்தது காங்கிரீட் துண்டு: உயிர் தப்பினார் நடிகை

பாலத்தில் இருந்து விழுந்தது காங்கிரீட் துண்டு: உயிர் தப்பினார் நடிகை

பாலத்தில் இருந்து விழுந்தது காங்கிரீட் துண்டு: உயிர் தப்பினார் நடிகை
Published on

பாலத்தில் இருந்து காங்கிரீட் துண்டு உடைந்து காரின் மீது விழுந்ததில் நடிகை அர்ச்சனா கவி உயிர் தப்பினார்.

தமிழில், அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்தவர், மலையாள நடிகை அர்ச்சனா கவி. இவர் மலையாள காமெடியன் அபிஷ் மாத்யூ என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். 

இவர் தனது குடும்பத்தினருடன் கொச்சி விமான நிலையத்துக்கு காரில் நேற்று வந்துகொண்டிருந்தார். அவர்கள் வந்த கார், கொச்சி மெட்ரோ பாலத்துக்கு கீழே வந்தபோது, அதன் மீது பாலத்தில் இருந்து பெயர்ந்து, காங்கிரீட் துண்டு விழுந்தது. இதனா ல் அந்த டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்தினார். பின்னர் காரை பார்த்தவருக்கு அதிர்ச்சி. முன்பக்க கண்ணாடி உடைந்தி ருந்தது. டிரைவர் இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் கான்கிரீட் துண்டு வந்து விழுந்துள்ளது. அதில் யாரும் அமராததால் காயம் ஏற்படவில்லை.

இதை ட்விட்டரில் பதிவிட்ட அர்ச்சனா கவி, ’’அந்த டிரைவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று மெட்ரோ ரயில் நிறுவன த்துக்கும் போலீசுக்கும் டேக் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம், ‘’அந்த டிரைவரை நேற்று மாலை தொடர்பு கொண்டோம். இது தொடர்பாக எங்கள் நிறுவனம் விசாரித்து வருகிறது. நடந்த சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள் ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com