\
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி
Published on

100 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார்.

தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். இதில் அவ்வவ்போது சிலர் வெளியேறுவதும், சிலர் புதிதாக உள்ளே வருவதுமாக நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. மிகவும் பரபரப்புடன் நடந்து வந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் ஆரவ் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, கடைசியாக கவிஞர் சினேகன், கணேஷ், அசோக், ஆகிய 4 பேர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். வெற்றி பெற்ற ஆரவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.

முன்னதாக 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகள் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் கிளம்பினாலும் வெற்றிகரமான நிகழ்ச்சியாகவே நிறைவுற்றுள்ளதாக கருதப்படுகிறது. நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com