நடிகை ஓவியாவால் தமிழகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஓவியா, ஆரவ் காதல் விவகாரத்தால் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் காயத்ரி, சக்தி, ஜூலி மற்றும் ரைசா என பலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வாரம் சினேகன், ஆரவ் மற்றும் காஜல் நோமின்டே செய்யப்பட்டனர். இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் தான் எலிமினேஷன் என்று கூறப்படுகிறது. அவர் எலிமினேட் ஆக காரணம் ஓவியாவை காதல் செய்வதாக பொய் கூறி ஏமாற்றியது தான். மக்கள் மத்தியில் ஓவியாவிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு ஆரவ் மீது வெறுப்பு இருக்கிறது. ஆரவ்வை நிகழ்ச்சி விட்டு வெளியேற்றும் வாய்ப்பை பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த வாய்ப்பு தற்போது மக்களுக்கு கிடைத்ததால் மக்கள் பயன்பத்தி ஆரவ்வை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றி விட்டனர். இன்று வெளியிட்டுள்ள ப்ரமோவ் வீடியோவில் ஆரவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது தெரிய வந்துள்ளது.