‘அரபிக் குத்து’ பாடல் செய்த சாதனை - சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு

‘அரபிக் குத்து’ பாடல் செய்த சாதனை - சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு

‘அரபிக் குத்து’ பாடல் செய்த சாதனை - சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் அரபிக் குத்து பாடல், யூ-ட்யூப் தளத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘மாஸ்டர்’ வெற்றிப்படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து, கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. முன்னாள் ‘ரா’ ஏஜெண்டாக இந்தப் படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. திரைக்கதை மற்றும் லாஜிக் காரணங்களால் ரசிகர்களை இந்தப் படம் கவரவில்லை என கூறப்பட்டது. ஆயினும், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூ-ட்யூப் தளத்தில் 200 மில்லியன், அதாவது 20 கோடி பார்வையாளர்களை கடந்த சாதனை புரிந்துள்ளது. இத்னைக் கொண்டாடும் விதமாக படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com