\
உலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

உலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

உலகக் கோப்பை ஹாக்கிக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்!
Published on: 

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் டைட்டில் பாடலுக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

14-வது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் 28 ஆம் தேதி ஒடிசாவில் நடக்கிறது. இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் துவக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று டைட்டில் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் துவக்க விழாவில் பாடலாசிரியர் குல்சார் எழுத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலகக்கோப்பைக்கான பாடலை இசையமைத்து பாடுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். துவக்க விழா நேரடி நிகழ்ச்சியில் ரஹ்மான் பங்கேற்பார்’ எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com