ஆஸ்கர் வென்ற பிறகு வந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான் !
நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், இந்திய இசைக்கலைஞர்கள் இந்தியர் அல்லாத ரசிகர்களை சென்றடைவது, அவர்களுக்கு பெரிய ஊந்துதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய இசையை கேட்பதற்கு மக்கள் நேரத்தை ஒதுக்கும் தற்போதைய சூழலில், அது அவசியம் எனவும் கூறியுள்ளார். இந்திய இசையை இந்தியர் அல்லாத ரசிகர்களிடம் எடுத்து செல்வதற்கு, ஆஸ்கர் வென்ற பிறகு தனக்கு வாய்ப்புகள் வந்ததாக நினைவு கூர்ந்த ஏ. ஆர். ரஹ்மான், தான் அப்போது இளைபாறும் மன நிலையில் இருந்ததால், அவற்றை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தால், இந்திய இசையின் எல்லை இன்னும் விரிவடைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு 3 வாரங்களில் இசையமைத்து முடித்துவிட்டதாக கூறிய அவர், ஆஸ்கருக்கு அப்படத்தை அனுப்பிய பிறகு, ரோஜா படத்திற்கு பின், கிடைத்தது போன்ற வரவேற்பு கிடைத்தாகவும் கூறியுள்ளார்.