தொகுப்பாளரை தமிழில் பேச சொல்லி மேடையை விட்டு இறங்கியது ஏன்? - ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

தொகுப்பாளரை தமிழில் பேச சொல்லி மேடையை விட்டு இறங்கியது ஏன்? - ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

தொகுப்பாளரை தமிழில் பேச சொல்லி மேடையை விட்டு இறங்கியது ஏன்? - ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
Published on

சென்னையில் நடந்த 99 சாங்ஸ் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளரை தமிழில் பேசுமாறு அறிவுறுத்தி, மேடையை விட்டு கீழே இறங்கியது ஏன் என ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் எழுதி, தயாரித்துள்ள திரைப்படம் ‘99 சாங்ஸ்’. இந்தப்படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இசைவெளியீட்டு விழாவின்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்தியில் பேசினார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த ரஹ்மான் ``இந்தி... முதலிலேயே கேட்டேன், தமிழில் பேசுவீர்களா..." என்று கூறி மேடையை விட்டு கீழே இறங்கினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்தநிலையில் அன்று தான் அப்படி நடந்துகொண்டதற்கான காரணத்தை தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ இந்தப்படத்தை நாங்கள் மூன்று மொழிகளில் வெளியிட உள்ளோம். ஹிந்தியில் முன்னதாக நிகழ்ச்சியை நடத்திய நாங்கள் அதற்கடுத்தப்படியாக தமிழ்நாட்டிற்கு வந்தோம்.

மொழிக்கு ஏற்றவாறு, நிகழ்ச்சியில் சில கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்திருந்தோம். அதற்காகத்தான் நான் தொகுப்பாளரை தமிழில் பேசுமாறு அறிவுறுத்தினேன். ஆனால் இஹானுக்கு ஹிந்தி நன்றாக புரியும் என்பதால் தொகுப்பாளர் அவ்வாறு பேசினார். அதனால்தான் நான் “இந்தி.... என்று கூறி மேடையை விட்டு கீழே இறங்கினேன்.

ஆனால் இதனை மக்கள் கையாண்ட விதம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு நகைச்சுவைக்காக நான் அப்படி நடந்துகொண்டேன். அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

ஆனால் இந்தச் சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால் எனக்கு நிறைய பணம் மிச்சப்பட்டுள்ளது. இஹான் மற்றும் என்னுடைய இருவருரின் முகமும் மக்களிடம் நன்றாக சென்றுடைந்துள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com