“எனக்கு கிடைத்த ஆயுதம் விஜய்” - முருகதாஸ் உற்சாகம்

“எனக்கு கிடைத்த ஆயுதம் விஜய்” - முருகதாஸ் உற்சாகம்
“எனக்கு கிடைத்த ஆயுதம் விஜய்” - முருகதாஸ் உற்சாகம்

‘சர்கார்’ படத்திலும் விஜய் தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்தார்.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில்பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “இந்தப் படத்தில் 3-வது முறையாக விஜய்யை வைத்து இயக்கியிருக்கிறேன். விஜய்யை திரையில் பார்த்ததை வைத்துதான் முதன்முதலாக ‘துப்பாக்கி’ படத்தில் அவருக்கான ஸ்க்ரிப்ட் தயார் செய்தேன். ஆனால் நான் நினைச்சதை விட அருமையாக நடித்து கொடுத்தார். உடனே இரண்டாது முறை அதனை விட சிறப்பான ஸ்க்ரிப்ட் தயார் செய்தேன். அப்போதும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து என்னை அசத்திவிட்டார். 

தற்போது மூன்றாவது முறையும் பிரத்யேகமாக ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணினேன். இப்போதும் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மிக அருமையாக நடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவரின் திறமை அதிகமாகிக் கொண்டே போகிறது. விஜய் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ அதனை இப்படத்தில் காணலாம். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்தால் நிச்சயம் சென்றுவிடுவார். எத்தனை கோடிபேர் இருக்கிறார்கள். என்ன ஆபத்து இருக்கிறது என்பதையெல்லாம் பற்றி பார்க்கமாட்டார். விஜய் தூத்துக்குடி போனது எல்லாருக்கும் தெரியும். ஆனால் புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு அவரே வண்டியை ஓட்டிச் சென்றது யாருக்கும் தெரியாது. ” எனத் தெரிவித்தார். மேலும் அவரிடம் ‘சர்கார்’ படத்தில் அரசியல் உள்ளதா எனக் கேட்டனர். அதற்கு, “இது குறிப்பிட்ட அரசியல் தலைவரை வைத்து கேளி செய்வதை போல இருக்காது. விஜய் போன்ற ஒரு weapon எனக்கு கிடைத்துள்ளது. அவரை பிரங்கிப் போல பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com