ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து நாளை முடிவு - அப்பல்லோ மருத்துவனை

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து நாளை முடிவு - அப்பல்லோ மருத்துவனை
ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் என்பது குறித்து நாளை முடிவு - அப்பல்லோ மருத்துவனை

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் ”ரஜினியில் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முழு ஓய்வு எடுக்க வேண்டும். ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், அவரை யாரும் பார்க்க அனுமதி இல்லை. அவரது ரத்த அழுத்தம் தொடர்ந்து மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சோதனையில் கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை கண்டறியபப்டவில்லை. ரத்த அழுத்தம் நேற்றைவிட கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகவே உள்ளது. பரிசோதனைகள், ரத்த அழுத்தக் காட்டுப்பாடு ஆகிய முடிவுகளின் அடிப்படையில் எப்போது டிஸ்சார்ஜ் என்று இன்று மாலையில் முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அவருக்கு இன்று மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாகவும், அவர் முழு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை கூறியிருக்கிறது.

முன்னதாக, சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. கட்சிப் பணிகள் இருப்பதால், முதலில் தனது காட்சிகளை முடித்துவிடும்படி வேண்டுகோள் விடுத்ததால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி வந்தது படக்குழு.

அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியான நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும். அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com