\
பாகுபலி-2 ஹிட்: அம்மனுக்கு அனுஷ்கா நன்றி

பாகுபலி-2 ஹிட்: அம்மனுக்கு அனுஷ்கா நன்றி

பாகுபலி-2 ஹிட்: அம்மனுக்கு அனுஷ்கா நன்றி
Published on

பாகுபலி 2 படம் ஹிட்டானதற்கு நன்றி தெரிவிக்க கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வந்ததாக நடிகை அனுஷ்கா தெரிவித்தார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்த படம், ’பாகுபலி 2’. இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், வசூலில் சாதனை படைத்துவருகிறது. இந்நிலையில் இதில் நடித்துள்ள நடிகை அனுஷ்கா, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு நேற்று வந்தார். அங்குள்ள துர்கா பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்ற அவர், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டார். பிறகு கொல்லூர் சென்று மூகாம்பிகை கோயிலிலும் வழிபட்டார். அவருடன் அவரது அம்மா, பிரபுல்லா ஷெட்டி, சகோதரர் குணராஜன் ஆகியோரும் சென்றனர்.

இதுபற்றி அனுஷ்கா கூறும்போது, ’பாகுபலி படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்துவருகிறது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கோயிலுக்கு வந்தேன்’ என்று தெரிவித்தார்.

அனுஷ்கா, தட்சண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com