கால் எலும்பு முறிந்ததா? நடிகை அனுஷ்கா மறுப்பு

கால் எலும்பு முறிந்ததா? நடிகை அனுஷ்கா மறுப்பு

கால் எலும்பு முறிந்ததா? நடிகை அனுஷ்கா மறுப்பு
Published on

படப்பிடிப்பில் நடந்த விபத்தில் தனது கால் எலும்பு முறிந்ததாக வந்த தகவலை நடிகை அனுஷ்கா ஷெட்டி மறுத்துள்ளார். 

சுதந்திரப்போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு உருவாகும் தெலுங்கு படம், 'சைரா நரசிம்ம ரெட்டி'. பீரியட் படமான இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கின்றார். அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கிறனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். 

நடிகை அனுஷ்கா இதில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது, அனுஷ்கா வுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக செய்தி வெளியானது. இதனால் பரபரப்பான திரையுலகினர் அவரிடம் நலம் விசாரிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், அதை மறுத்துள்ள அனுஷ்கா, ‘’நான் நலம். சியாட்டில் நகரில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக் கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அன்பு’’ என்று தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா இப்போது, மாதவன் நடிக்கும் ’சைலன்ஸ்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோயினாக அஞ்சலி பாண்டே நடிக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com