கோலிக்கு வரவேற்பு! அனுஷ்காவுக்கு தடை!: பாக் பரபர
அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’ படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது.
காதலர்களாக இருந்த அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி ஜோடி கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்குப் பின் அனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘பரி’. இதனை இவரது சொந்த பட கம்பெனியான க்ளீன் ஸ்டேல் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்தப்படத்தை பாகிஸ்தான் தடை செய்துள்ளது. குரான் மற்றும் இந்து மந்திரங்களை கொண்டு மாயாஜாலம் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் தடை செய்வதாக பாகிஸ்தான் சென்சார் போர்ட் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இஸ்லாம் நாடு. அவர்களது மதத்திற்கு எதிராக உள்ளதால் இந்தப் படத்தை தடை செய்திருக்கலாம். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அக்ஷய்குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான ‘பேட்மேன்’ படத்தையும் தடை செய்தனர். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் குறித்து பேசிய அந்தப்படத்திற்கும் பாகிஸ்தான் தடை போட்டதுதான் ஆச்சர்யமளித்தது. இது எங்கள் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் இந்தப் படம் எதிராக உள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க முடியாது என மறுத்தனர்.