\
பழம்பெரும் ஹீரோயின் பானுமதி ஆகிறார் அனுஷ்கா!

பழம்பெரும் ஹீரோயின் பானுமதி ஆகிறார் அனுஷ்கா!

பழம்பெரும் ஹீரோயின் பானுமதி ஆகிறார் அனுஷ்கா!
Published on

’நடிகையர் திலகம்’ படத்தில் நடிகை பானுமதியாக அனுஷ்கா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ’நடிகையர் திலகம்’ என்ற பெயரில் உருவாகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாக நடிக்கிறார். அவர் காதல் கணவர் ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மான் நடிக்கிறார். மற்றும் சமந்தா, ஷாலினி பாண்டே, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்துக்கு மிக்கி ஜே மேயர் இசை அமைக்கிறார். அடுத்த மாதம் 29 -ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா, பானுமதியாக நடிக்கிறார். ’சமீபத்தில் ஒப்பந்தமான அவர் இதில் நடித்து முடித்துவிட்டார்’ என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி அறிவிக்கவில்லை. 

சாவித்திரியின் கடைசிகட்ட வாழ்வில் அவருக்கு பல வகையிலும் உதவியவர் பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com