\
‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன்

‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன்

‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் அனுபமா பரமேஸ்வரன்
Published on

‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘முண்டாசுப்பட்டி’ வெற்றிக்கு பிறகு 4 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் ராம்குமார், ‘ராட்சசன்’ என்ற த்ரில்லர் படத்தை கொடுத்தார். மக்களின் வரவேற்பை பெற்ற ‘ராட்சசன்’ 2018ன் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பெரிய போட்டி நிலவியது. ஒரு வழியாக பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டது. இந்நிலையில் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரின் மகனான பெல்லம்கொண்டா சீனிவாசன் நாயகனாக நடிப்பார் என்றும் ரமேஷ் வர்மா என்ற புதுமுக இயக்குநர் படத்தை இயக்குவார் என்றும் அறிவிப்பு வெளியானது.

மேலும் இப்படத்துக்கு தமிழில் இசையமைத்த ஜிப்ரானே இசையமைப்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படக்குழு குறித்து தேர்வுகள் முடிந்த நிலையில் படத்தில் அமலாபால் வேடத்தில் யார் நடிப்பது என்ற தேர்வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. ரகுல் ப்ரித் சிங் நடிப்பதாகவும், ராஷி கண்ணா நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் படக்குழு அதிகாரப்பூர்வமாக கதாநாயகி யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. 

இந்நிலையில்‘ராட்சசன்’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் 75 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com