சினிமா
சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் சினிமாவில் நடிக்கவுள்ளார்.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், அசல், ஐ, எல்.கே.ஜி உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது மகன் தர்ஷன் நடிகராக விரைவில் நடிக்கவிருக்கிறார்.
ஏற்கனவே, சிவாஜியின் பேரன்கள் நடித்திருந்தாலும் அதில், கவனம் ஈர்த்தவர் பிரபு மகன் விக்ரம் பிரபுதான். இந்நிலையில், தர்ஷன் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.