விஐபி 2 ரீலிஸ் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஐபி 2.
வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக விஐபி 2 தயாராகியுள்ளது. இப்படம் தனுஷ் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தனுஷ் பிறந்த நாளன்று படம் வெளியாகவில்லை. இது தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.
தற்போது விஐபி 2 படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என்மனசு தங்கம் திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகிறது.