\
'ரைட்டர்' - பா.ரஞ்சித் தயாரிக்கும் 3-வது படத்தின் கவனம் ஈர்க்கும் போஸ்டர்!

'ரைட்டர்' - பா.ரஞ்சித் தயாரிக்கும் 3-வது படத்தின் கவனம் ஈர்க்கும் போஸ்டர்!

'ரைட்டர்' - பா.ரஞ்சித் தயாரிக்கும் 3-வது படத்தின் கவனம் ஈர்க்கும் போஸ்டர்!
Published on: 

இயக்குநர் பா.ரஞ்சித் தனது தயாரிப்பில் வெளியாகவிருக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பா.ரஞ்சித், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படம், அந்த ஆண்டு வசூலைக் குவித்ததோடு பாராட்டுக்களையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்தார். இப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.


இந்நிலையில், பா.ரஞ்சித் நேற்று மாலை மூன்றாவதாக தயாரிக்கும் தனது படத்தின் அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

“ரைட்டர்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தினை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கவிருக்கிறார். '96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகியோர்கள் 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்‌ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், அறிவிப்பு வெளியான 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகி இருப்பதோடு ஷூட்டிங்கும் நேற்றிலிருந்தே துவங்கியிருக்கிறது. இப்படத்தின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கிறார். சமுத்திரக்கனி ஏற்கெனவே, பா.ரஞ்சித்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com