\
Announcement of 72nd National Film Awards Amaran Movie get in 3 awards
ராயன், அமரன்எக்ஸ் தளம்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | சிறந்த தமிழ்ப்படம் ‘ராயன்’.. 3 விருதுகளை அள்ளிய ‘அமரன்’ !

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ‘பிரம்மயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ’ராயன்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சமூக அக்கறைக்கான படம் மற்றும் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது ( தனுஷ்) ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படத்துக்கான விருது ‘ஆர்ட்டிகள் 370’ என்ற இந்திப் படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ‘பிரம்மயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான விருது ‘ஆர்ட்டிகிள் 370’ திரைப்படத்துக்காக நடிகை யாமி கெளதமுக்கு அறிவிப்பு

சிறந்த படத்தொகுப்பு (கலைவண்ணன்) மற்றும் சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த இயக்குநருக்கான (ராஜ்குமார் பெரியசாமி) விருது ’அமரன்’ படத்துக்கு அறிவிப்பு

சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு தேசிய விருது, ’மெய்யழகன்’ படத்துக்கு அறிவிப்பு

சிறந்த சண்டைப் பயிற்சி (அனல் அரசு) மற்றும் சிறந்த துணை குணச்சித்திர நடிகை (சஞ்சனா நமிதாஸ்) ஆகியவற்றுக்கான இரண்டு தேசிய விருதுகள் ’மஹாராஜா’ படத்துக்கு அறிவிப்பு

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் (தீபாலி நூர், ஷீதல் ஷர்மா) விருது ’புஷ்பா 2’ திரைப்படத்துக்கு அறிவிப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com