\
நாளை வெளியாகிறது அண்ணாத்த படத்தின் ‘மருதாணி’ பாடல்

நாளை வெளியாகிறது அண்ணாத்த படத்தின் ‘மருதாணி’ பாடல்

நாளை வெளியாகிறது அண்ணாத்த படத்தின் ‘மருதாணி’ பாடல்
Published on: 

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியின் அறிமுக பாடலும், ரஜினி - நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாரல் காற்றே’ பாடலும் சமீபத்தில் வெளியானது. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினி - மீனா - குஷ்பு ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘மருதாணி’ என்ற பாடல், படத்தின் 3-வது பாடலாக நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com