\
விரைவில் வருகிறது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விரைவில் வருகிறது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விரைவில் வருகிறது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
Published on

ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக்’ விரைவில் வெளியாக உள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவருகிறார். அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது.

மேலும் இதுவரை படமாக்கிய காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்சன் வேலைகளை இயக்குனர் சிவா முடித்துவிட்டார். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ விரைவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை நவம்பர் 4 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com