நடிகர் ஜெய்க்கு அன்பான வாழ்த்தை தட்டிவிட்ட அஞ்சலி
நடிகர் ஜெய்க்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை அஞ்சலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள். ஆனாலும் அவருக்கு யாரும் அதிகமாக வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. ஒருவர் மட்டும் ஜெய்யின் பிறந்தநாளை மறக்காமல் வைத்திருந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அந்த மறக்க முடியாதவர் வேறு யாருமில்லை; நடிகை அஞ்சலிதான்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ஹேப்பி பர்த்டே ஜெ..இன்று உனக்கு சிறப்பான நாள். உனது உலகத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும், அதற்காக நான் உன்னை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்ததில் இருந்தே இவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதனை இருவரும் மறுத்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருவதாகவே பேச்சு அடிப்பட்டது. அதன் பிறகு அஞ்சலியை நான் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யமில்லை என நடிகர் ஜெய் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அஞ்சலி போடும் முதல் ட்விட் இது. ஆகவே விரைவில் ஒரு காதல் கல்யாணம் கோலிவுட் மேடையில் அரங்கேறலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

