அஞ்சலியின் அக்கா கோலிவுட்டில் கால் பதிக்க வருகிறார் என்ற செய்தி, வதந்தி தான் என்பது நிரூபணமாகியுள்ளது.
'கற்றது தமிழ்' மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து நல்ல படங்கள் அமையவே கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். சமீபத்தில் ரீலிஸான தரமணி படத்திலும் சிறப்பு வேடத்தில் வந்திருந்தார். இந்நிலையில் அஞ்சலியின் சகோதரியும் கோலிவுட்டில் கால் பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி ஹாட் டாப்பிக்காவே மாறியது என கூறலாம்.
இந்நிலையில் அஞ்சலியின் மக்கள் தொடர்பாளர் ரியாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அஞ்சலியின் சகோதரி குறித்து பரவும் தகவல்கள் பொய்யானது. அவருக்கு ஒரேயோரு அக்கா மட்டுமே உள்ளார். அவரும் திருமணமமாகி இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார் என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்விட்டை அஞ்சலி ரீட்விட் செய்துள்ளார். இதன் மூலம் அஞ்சலியின் சகோதரி சினிமாவுக்கு வருகிறார் என்ற செய்தி பொய்யாகியுள்ளது.