\
பவன் கல்யாண் படத்தில் இணையும் அஞ்சலி... தெலுங்கில் உருவாகும் பிங்க் ரீமேக்

பவன் கல்யாண் படத்தில் இணையும் அஞ்சலி... தெலுங்கில் உருவாகும் பிங்க் ரீமேக்

பவன் கல்யாண் படத்தில் இணையும் அஞ்சலி... தெலுங்கில் உருவாகும் பிங்க் ரீமேக்
Published on

பாலிவுட்டில் வெளியான பிங்க் படம் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அதில் அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார். படத்தை வேணு ஸ்ரீராம் இயக்குகிறார். ஆண்டின் தொடக்கத்தில் அதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் தொடங்கியது.

பிங்க் படத்தில் டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். அதேபோல கீர்த்தி குல்ஹரியின் கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு ரீமேக்கை போனிகபூரும் தில் ராஜூம் இணைந்து தயாரிக்கிறார்கள்.

"நாளை உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது" என்று ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அது படத்தின் முதல் போஸ்டராகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று கதாநாயகிகளுடன் பவன் கல்யாண் தோன்றும் காட்சியாகவும் இருக்கலாம்.

மார்ச் மாத தொடக்கத்தில் வக்கீல் சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ரிலாக்ஸாக பவன் கல்யாண் புத்தகம் படிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு திருவிக்ரம் சீனிவாஸ் வசனம் தீட்டுகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com