\
விவேகம் ரீரெக்கார்டிங்: அனிருத் சிலிர்ப்பு

விவேகம் ரீரெக்கார்டிங்: அனிருத் சிலிர்ப்பு

விவேகம் ரீரெக்கார்டிங்: அனிருத் சிலிர்ப்பு
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் நடிக்கும் படம், ’விவேகம்’.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது ரீரெக்கார்டிங் பணிகள் நடந்துவருகிறது.

படத்துக்கு இசை அமைக்கும் அனிருத் கூறும்போது, ‘விவேகம் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. சர்வைவா பாடலுக்கும் தல விடுதலை பாடலுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு பாடல்களை விட அடுத்தப் பாடல் வித்தியாசமாக இருக்கும். அது கர்நாடிக் இசை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்துவருகிறது. அதிக உற்சாகத்துடன் அந்தப் பணிகளை செய்துவருகிறேன். அஜீத் கலக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள். இயக்குனர் சிறுத்தை சிவா, பாடலுக்கான டியூன்களை சொல்லிவிட்டு, பரிசோதனை முயற்சிக்கு என்னை  விட்டுவிடுவார். அதனால்தான், தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com