\
“நயன்தாரா இருக்காங்களா? அப்ப நான்தான் மியூசிக்”: அனிருத்

“நயன்தாரா இருக்காங்களா? அப்ப நான்தான் மியூசிக்”: அனிருத்

“நயன்தாரா இருக்காங்களா? அப்ப நான்தான் மியூசிக்”: அனிருத்
Published on: 

நயன்தாரா நடிக்கிறார் எனத் தெரிந்தவுடன் படத்திற்கு தானே இசையமைப்பதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

இளம் இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதன் இயக்குநர் நெல்சன், அவரை தொடர்பு கொண்டு கதையை கூறிய உடனேயே நடிப்பதாக உறுதி அளித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரான நெல்சன் அனிருத்திற்கும் நண்பர். இந்தக் கதையில் நயன் நடிப்பதாக கூறிவிட்டார் என அனிருத்திடம் சொல்ல, அவரோ ‘அப்படி என்றால் நான் தான் படத்திற்கு மியூசிக் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிடு’ என சொல்லி இருக்கிறார். விக்னேஷ் சிவனின் நண்பரான அனிருத் நடிகர் சிவகார்த்திகேயனின் பெஸ்ட் ஃபிரெண்ட். இந்தக் கூட்டணிக்குள் ஒரு பாண்டிங் இருப்பதால் படங்களிலும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி வருகிறது. அதன் அடிப்படையில்தான் ‘கோகோ’வுக்கு அவர் தானே முன் வந்து இசையமைப்பதாக வாக்கு தந்துள்ளார். அது என்ன கோகோ என்கிறீர்களா? அதாங்க, கோலமாவு கோகிலா.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com