’அஜித் 61’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?

’அஜித் 61’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?

’அஜித் 61’ படத்திற்கு இசையமைக்கும் அனிருத்?
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘அஜித் 61’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், போனி கபூர், ஹெச்.வினோத் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, அஜித் தனது 60 வது படமாக போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் பொங்கலையொட்டி வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகிறது.

இந்த நிலையில் இக்கூட்டணி மீண்டும் ‘அஜித் 61’ படத்தில் இணையவுள்ளது. இதனை, போனி கபூர் சமீபத்திய பேட்டியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், ’அஜித் 61’படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்-யுவன் கூட்டணிதான் வெற்றிக்கூட்டணி என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால், ‘அஜித் 61’ படத்திற்கு அனிருத் ஒப்பந்தமாகி இருப்பதால் யுவன் ரசிகர்களோடு அஜித் ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com