சினிமா
‘மரண மாஸ் தோனிக்கே பொருத்தமாக இருக்கும்’ – அனிருத்
‘மரண மாஸ் தோனிக்கே பொருத்தமாக இருக்கும்’ – அனிருத்
‘பேட்ட’ படத்தின் மரண மாஸ் பாடல் தோனிக்கே பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ படத்தில் வரும் ‘மரண மாஸ்’ பாடல், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் ஆனது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் உடனான சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தான் எம்.எஸ்.தோனியின் மிகப்பெரிய ரசிகர் என்பதை வெளிப்படுத்தியதோடு, 'பேட்ட'வின்' மரண மாஸ் பாடல் தல தோனிக்கு மிகவும் பொருத்தமானது என்று அப்பாடலின் இசையமைப்பாளரான அனிருத் கூறியுள்ளார். மேலும், ஒரு கேப்டனாக ஒரு வீரராக தோனியின் அமைதியால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் அனிருத் கூறினார்.
விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரும் மாஸ்டர், கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘டாக்டர்’, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', விக்ரம், துருவ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம், கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்... என கைவசம் ஏராளமான பெரிய படங்களை வைத்திருக்கிறார் அனிருத்.