அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ : அறிவு பாடல் வரிகளில் அனிருத் பாடிய ‘க்யூட் பொண்ணு’ பாடல்

அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ : அறிவு பாடல் வரிகளில் அனிருத் பாடிய ‘க்யூட் பொண்ணு’ பாடல்
அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ : அறிவு பாடல் வரிகளில் அனிருத் பாடிய ‘க்யூட் பொண்ணு’ பாடல்

’குக் வித் கோமாளி’ அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் தெருக்குரல் அறிவு வரிகளில் அனிருத் பாடல் பாடியுள்ளார்.

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் புகழ், அஸ்வின். தற்போது இருவரும் ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 19 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘க்யூட் பொண்ணு’ பாடலை ’தெருக்குரல்’ அறிவு வரிகளில் இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். ஏற்கனவே, அனிருத் - அறிவு இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com