\
50 லட்சத்தை எட்டியது அனிருத் ஹார்ட் பீட்

50 லட்சத்தை எட்டியது அனிருத் ஹார்ட் பீட்

50 லட்சத்தை எட்டியது அனிருத் ஹார்ட் பீட்
Published on

அனிருத்தின் ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது.

திரை நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும், பணியாற்றும் படம் சம்பந்தமான புதிய தகவல்களை ட்விட்டரில்தான் பெரும்பாலும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளம் என்பது நட்சத்திரங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. அதற்காக அவரை 24 ஏஎம் படத் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்தியுள்ளது. மேலும் “50 லட்சம் உள்ளங்களை சம்பாத்திருக்கும் ராக் ஸ்டார் அனிருத் இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com